Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Monday, July 4, 2022

வருகின்ற ஜூலை 6-ம் தேதி எந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

July 04, 2022 0

 வருகின்ற ஜூலை 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.


குமரி மாவட்டத்தில் பிரசித்தி  பெற்ற கோவில்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும்  ஜூலை 6-ம் தேதி நடைபெற இருப்பதால் அதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 கன்னியாகுமரி மாவட்டம் - குழித்துறை தேவசம் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில்  400 ஆண்டுகளுக்கு பிறகு மகா குடமுழுக்கு விழா 06-07-2022 புதன்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவிக்கப்பட்டுள்ளார்.



Read More

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

July 04, 2022 0


 குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அலிகான் கன்னியாகுமரி மேல் மிடாலம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது இதில் அழிக்கால் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்து கரை நோக்கி ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தன இதனால் வீடுகளில் வசிக்கும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வீட்டின் பொருட்கள் தண்ணீரில் மேலும் வேண்டும்

Read More

Saturday, June 25, 2022

மணப்பெண்ணின் கழுத்தில் மாலை போடுவதற்கு பதிலாக கொழுந்தியார் கழுத்தில் மாலை போட்டதால் மாப்பிள்ளைக்கு பரிதாப நிலை..!

June 25, 2022 0


திருமணத்திற்கு குடிபோதையில் தள்ளாடியபடி  வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் மணப்பெண் தங்கையிடம் தர்ம அடி வாங்கியுள்ளார்.


இது குறித்த வீடியோ காட்சியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு மணமேடைக்கு வந்துள்ளார்.


இதனால் மணமகளின் தங்கை கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்துவிட்டு,கையில் வைத்திருந்த மாலையை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, மணப்பெண் கழுத்தில் போடுமாறு கூறியுள்ளார்.


ஆனால் மாப்பிள்ளை தள்ளாடியபடி நின்றுள்ளார்.


மணப்பெண் மாலையை மாப்பிள்ளை கழுத்தில் போட்ட பின்பு, மாப்பிள்ளையே மணப்பெண்ணின் தங்கையின் கழுத்தில் போட்டுள்ளார்.


இதனால் ஆவேசமடைந்த மச்சினிச்சி மாப்பிள்ளையை சரமாரியாக கன்னத்தில் அடித்துள்ளார்.


மணமகள் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தாமல் அவரது தங்கை மாப்பிள்ளையை தாக்கியுள்ளார்.


இந்த சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



https://twitter.com/Vikki19751/status/1539259892376162307?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1539259892376162307%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fperfectnewspost.com%2Fdrunken-bride-groom-was-beaten-by-brides-sister%2F

Read More

Friday, June 24, 2022

ஆங்கிலம் சரியாக படிக்கவில்லை; 4 வயது சிறுவன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய டியூசன் ஆசிரியர்

June 24, 2022 0



ஆங்கிலம் சரியாக படிக்கவில்லை என கூறி 4 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.


திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பலுருதி பகுதியை சேர்ந்த பெற்றோர் எல்.கே.ஜி படிக்கும் தங்கள் 4 வயது மகனை அதேபகுதியில் டியூசன் ஆசிரியராக உள்ள அகில் (வயது 30) என்பரிடம் சேர்ந்துள்ளனர்.


இதனிடையே, 4 வயதான அந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனின் உடலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தளும்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இது குறித்து சிறுவனிடம் கேட்டபோது தான் ஆங்கில எழுத்துக்களை சரியாக படிக்காததால் டியூசன் ஆசிரியர் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, சிறுவனின் தாய் டியூசன் ஆசிரியர் அகிலிடம் கேட்டுள்ளார்.


ஆனால், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் போலீசில் புகார் அளிக்கக்கூடாது எனவும் சிறுவனின் தாயை அகில் மிரட்டியுள்ளார்.


சிறுவனை தாக்கியது, அதை கேட்கச் சென்றபோது மிரட்டல் விடுத்தது குறித்து சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.


புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியர் அகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More

Wednesday, June 22, 2022

"யாராவது பொண்ணு கொடுங்கப்பா"... போஸ்டர் ஒட்டி நூதன முறையில் பெண் தேடும் இளைஞர்..!!

June 22, 2022 0

 


நான்கு ஆண்டுகளாக வரம் பார்த்தும் திருமணம் ஆகாததால், மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தை துவங்கி உள்ளார்.


மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல் மற்றும் சினிமா நடிகர்கள் குறித்தான போஸ்டர்களும், பழிக்கு பழியாக வசனங்களில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சித்தரிக்கப்படும் போஸ்டர்களும் பெருமளவில் பேசுபொருளாவது வழக்கம்.


இந்நிலையில், மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் (27) B.Sc.IT முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் வைத்துள்ளார்.


நான்கு ஆண்டுகளாக வரம் பார்த்தும் திருமணம் ஆகாததால், மதுரை மாநகர் புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தை துவங்கி உள்ளார்.


இதுகுறித்து 90 கிட்ஸ் ஜெகன் கூறுகையில், "நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் செய்து வருகிறேன், பல பேருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்ட முடிவு செய்து இதை செய்துள்ளேன். இந்த போஸ்டரை பார்த்து பல பேர் கேலி, கிண்டல் செய்து தொலைபேசியில் பேசுவார்கள், ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை.


நான்கு வருடமாக பெண் பார்த்தும் வரன் ஒன்று கூட அமையவில்லை, பெண் பார்க்கும் புரோக்கர்கள் ஜாதகம் மற்றும் பணத்தை வாங்கிச் செல்வார்கள், ஆனால் ஒரு பெண்ணை கூட காண்பிக்க மாட்டார்கள், இது புரோக்கர்களுக்கு வந்த சோதனையான அல்லது 90 கிட்ஸ்களுக்கு வந்த சோதனையா என தெரியவில்லை, போஸ்டரை பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று பார்த்தால் , மீண்டும் பெண் புரோக்கர்களே தொடர்பு கொள்கிறார்கள்" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.


மேலும், அவருடைய நண்பர் பாசித் கூறுகையில், " பெண்கள் என் நண்பரின் படிப்பு, கல்வி, தகுதி ஆகியவை பார்த்து நிராகரித்து விடுகிறார்கள், தற்போது தான் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பெண்கள் தொடர்பு கொண்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.n


ஏற்கனவே 90 கிட்ஸ் வேதனை அடையும் நிலையில், 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நூதனமுறையில் மணமகள் தேவை என்று 90 கிட்ஸ் ஜெகன் செய்துள்ள செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






Read More

Monday, June 20, 2022

ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதிய 2 கைகள் இல்லாத மாணவி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

June 20, 2022 0

 


இரு கைகளும் இல்லையென பெற்றோரே கைவிட்ட நிலையில் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டார்.


இதில் இரு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதிய ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்த மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.


மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி, ஆசிரியை உதவியுடன் கடந்த மே மாதம் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.


வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மாணவி பதிலளிக்க ஆசிரியர் அதை எழுதினார்.


 பிறக்கும்போதே  2 கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால், பெற்றோர்கள் இவரை பராமரிக்க இயலாமல் கைவிட்டதால், மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இவர் 2 வயது குழந்தையாய் இருந்தபோதிலிருந்து அங்கு வளர்ந்து வருகிறார்.


இந்த நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், மாணவி லட்சுமி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.


அவர் 277 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகள், காப்பாளர்கள் மாணவி லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

Friday, June 17, 2022

தெரு ஓரத்தில் சமோசா விற்கும் ஆப்கான் செய்தி வாசிப்பாளர்

June 17, 2022 1

 


ஆப்கானில் வறுமையால் சமோசா விற்று வருகிறார் டிவி செய்தியாளர் ஒருவர்.


இது சம்பந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்.


அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம்.


அதில், ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் சமோசா விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.


ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள்.


சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.


தலீபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.


பத்திரிக்கையாளரின் வாழ்க்கை

இந்நிலையில் தான், ஆப்கானின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


அத்துடன் அவர், “தலீபான் ஆட்சியில் ஒரு பத்திரிக்கையாளரின் வாழ்க்கை.


மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கான் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.


ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை.


குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறர்.


ஆப்கானில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.







Read More

Thursday, June 16, 2022

தனக்கு தானே கல்லறை கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்த பெண் கல்லறை அருகிலேயே உயிரிழந்து கிடந்த சோகம்

June 16, 2022 0


 தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து தனக்கு தானே கல்லறை கட்டி கல்லறை அருகிலேயே வாழ்ந்து வந்த பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி(வயது 65).


திருமணமாகாத இவர் பல்லுகுழி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.


100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.


இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர்.


தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.


கடந்த 12-ம் தேதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையில் இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் ரூ. 50 ஆயிரம் செலவில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார்.


கான்கிரீட் மூலம் கட்டப்பட்ட இந்த கல்லறையில் கிரானைட் பதிக்கப்பட்டு, சிலுவை, அவர் முகம் பதித்த தகடு ஆகியவை உள்ளன.


எவருக்கும் பாரமாக இருக்ககூடாது என்பதற்காக எனக்கான கல்லறையை இவர் கட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA