Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Thursday, September 15, 2022

நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் பிரச்சாரம்; பொதுமக்கள் பாராட்டு

September 15, 2022 0

 


நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாலிபர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெனிஷ் (வயது 25), சுமிஷ் (25). பட்டதாரியான இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டனர். அதன்படி வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணை ஒழிப்பு குறித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணமகன்கள் கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் நூதன முறையில் ஜெனிஷ், சுமிஷ் ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பலகை அணிந்திருந்தனர். அதில், மணப்பெண் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை என்றும் சாதி, மதம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.


மேலும் பேருந்துநிலையத்தில் இருந்த வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது எனவும், பணத்தை விட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் எனவும் தெரிவித்தனர்.


இவர்களது நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் பேருந்துநிலையத்தில் இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதே சமயத்தில் பொதுமக்கள் அவர்களின் செயலையும் பாராட்டினர்.



Read More

Tuesday, September 6, 2022

"கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" - ஜாதகத்துடன் திருமண பேனர்

September 06, 2022 0

 


ஜாதகத்துடன் திருமண பேனர் "கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" திருமண பேனர் ஒன்று கவனம் ஈர்த்து உள்ளது.


ராமநாதபுரத்தில் திருமணவிழா ஒன்றில் கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க என்று நண்பர்கள் வைத்துள்ள பேனர் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருமண விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் பேனர்கள் வைக்கும் நிகழ்வு அதிகரித்துவிட்டது. பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டாலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.


ராமநாதபுரத்தில் உள்ள திருமண மகால் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக நண்பர்கள் வைத்திருந்த பேனர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேனரில் மணமக்கள் புகைப்படத்திற்கு கீழ் ஜாதக வடிவில் மணமகனின் நண்பர்கள் தங்கள் புகைப்படம், பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு 'கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க" என்று பெண் தேடும் படலத்தை பேனர் வடிவில் வைத்திருந்தனர்.


இதுகுறித்து மணமகனின் நண்பர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு பெண் பார்த்து வீட்டில் சளைத்துவிட்டனர். நல்ல பையனா என்று யார் பார்க்கின்றனர். வீடு இருக்கா, வேலை இருக்கா, சொத்து இருக்கா, வயசு எவ்ளோ, வங்கி இருப்பு எவ்ளோ என்று ஆயிரத்தொட்டு  கேள்வி கேட்டு, யோசித்து செல்கிறார்கள்  என்று நிராகரித்து விடுகின்றனர்.


அதனால் நாங்களே வித்தியாசமாக பெண் தேடுவோம் என்று இவ்வாறு படங்களை போட்டு அவரவர் ஜாதக விபரங்களை போட்டு பேனர் அடித்துள்ளோம். திருமண விழாவிற்கு வருபவர்களில் யாருக்காவது இதில் ஒருவரை பிடித்து திருமணம் நடந்தால் அதுவே எங்களுக்கு சந்தோசம்தான் என்றனர்.


Read More

Monday, September 5, 2022

ஏசி மூலம் பரவும் புதிய வகை வைரஸ் - 4 பேர் பலி

September 05, 2022 0

 அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் 'லெஜியோனேயர்ஸ்'என்ற நோயால் 4 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


உலகில் தற்போது நோய்களுக்கு பஞ்சமில்லை நாள் தோறும் புதுபுது நோய்கள் உருவாகின்றது. இந்தநிலையில் அர்ஜென்டினாவில் தற்போது ஏசி.யில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதிக காய்ச்சல் , உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மந்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த நோயின் பெயர் 'லெஜியோனேயர்ஸ்.'இது, 'லெஜியோனெல்லா'என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இதே பகுதியில் மேலும் 7 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே நேரம், தொற்று பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்கு அது பரவவில்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கடந்த 1976ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் படை பிரிவு வீரர்களிடையே 'லெஜியோனேயர்ஸ்'நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது.


'லெஜியோனெல்லா' பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும் போதோ அல்லது இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தாலோ நுரையீரல் தொற்று ஏற்படும். அசுத்தமான நீர், அசுத்தமான ஏசி.களில் இருந்து இந்த பாக்டீரியா உருவாகி தாக்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



Read More

Monday, July 25, 2022

பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை வெளுத்து வாங்கிய பெண்..!

July 25, 2022 0

 


 தர்மபுரி பேருந்துநிலையத்தில் தனியாக நின்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர்.


 தர்மபுரி புறநகர் பேருந்துநிலையத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது.


 அதேபோல் பல்வேறு  பணிகளுக்காக தினமும் ஆயிரங்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.


 இதனால் தர்மபுரி பேருந்துநிலையம் எப்போதும் பொதுமக்கள் நிரம்பி  பரபரப்பாக காணப்படும்.


 பேருந்து நிலையத்தின் நடுவே புறக்காவல் நிலையம் உள்ளது.


 இங்குள்ள காவல்துறையினர்  திருட்டு மற்றும் குற்றசம்பவங்களை தடுக்கும் பணியில் உள்ளனர்.


 ஆனாலும் காவல்துறையினர்  கண்காணிப்பு குறைவால் அடிக்கடி பயணிகளிடம்  பிக்பாக்கெட் அடிப்பது, வாகனத்திருட்டு, பெண்களிடம் கேலி கிண்டல் செய்வது, பாலியல் ரீதியாக சீண்டுவது, என அவ்வப்போது  குற்றங்கள்  நடப்பது வழக்கம்.


 இந்நிலையில் நேற்று  புறநகர் பேருந்து நிலையம்  திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும்  இடத்தில் வெளியூர் செல்வதற்கான ஒரு  பெண் தனது  குழந்தைகளுடன் நின்றுள்ளார்.


 அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் குடிபோதையில் அங்கு  நின்றிருந்த பெண்ணை  தவறான முறையில் தொட்டுள்ளார்.


 இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பொதுமக்கள் மத்தியில் இது போன்று   பெண்களிடம் நடந்துகொள்ளுவாயா  என திட்டி  முதியவரை சரமாரியாக  அடித்து கீழே தள்ளி  உதைத்துள்ளார்.


 இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் அப்பெண்ணின்  பிடியிலிருந்து தப்பித்தால் போதும்  என்று ஓடிவிட்டார்.


 பின்பு அந்தப்பெண் அங்கிருந்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு  அவர் செல்லும்  பேருந்து வந்தவுடன் ஏறி சென்றுவிட்டார்.


 மேலும் அப்பெண்ணிண் செயலை அங்குள்ள  பொதுமக்கள் பாராட்டினர்.


 அந்தப்பெண் முதியவரை அடித்ததை  அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் எடுத்து   சமூக வலைதளங்களில் பரப்பியதால் தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.



Read More

கபடி விளையாட்டின் போது கபடி வீரருக்கு நடந்த சோகம்!

July 25, 2022 0

 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம்ஆண்டு படித்து வந்தார்.


இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார். நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார்.


அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார். உடனே அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


வீடியோ :

https://youtube.com/shorts/rQlcj_lfFXc?feature=share

Read More

Saturday, July 23, 2022

உடலோடு சேர்த்து கட்டப்பட்ட பாடப்புத்தகம் – ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

July 23, 2022 0


 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.


இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், நண்பகலிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.


அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர். பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார். பின்னர், மாணவியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


"என் மகளை நான் புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறேன்" - கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கம்


என் மகளை நான் புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறேன் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கமாக கூறி உள்ளார்.


மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது.


இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் இன்று காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதன்காரணமாக காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது. பாடப் புத்தகத்தோடு மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


மாணவி ஸ்ரீமதியின் உடலோடு பாட புத்தகம் சேர்த்து கட்டப்பட்டது. அவர் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய எண்ணியிருந்தார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற உயிரியல் புத்தகம் மாணவியின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. இது காண்போரின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது.


முதல் முறையாக பெரியநெசலூர் மயானத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்துள்ளனர். மயானத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் அமைச்சர் கணேசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.


கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன். அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள்; இனியும் இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது.


என் மகள் மரணத்தில் பள்ளி தாளாளர், அவரது மனைவி, மகன்கள், பள்ளி ஆசிரியைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் குற்றவாளிகள்; அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.


தமிழக அரசு தற்போது வேகமாக வழக்கை விசாரித்து வருகிறது. நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என கூறினார்.













Read More

Thursday, July 21, 2022

ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் காதல் தம்பதி..!

July 21, 2022 0

 


 கேரளாவில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைர்கலாகி  வருகிறது.


 கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி கிரி மற்றும் தாரா. கேரளா மாநில அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி  டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணியை செய்து வருகின்றனர்.


 மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமான பேருந்து இல்லை.


 இந்தப் பேருந்தில், பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர வைக்கும் பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.


 பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் இந்தப் பேருந்தில் உள்ளது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியை செலவிட்டு உள்ளனர்.


 இவர்களுக்கு ஏறத்தாழ ரசிக பெருமக்களும்  உள்ளனர்.


 இந்தப் பேருந்தில் அடிக்கடி வழக்கமாக பயணிப்பவர்கள்  தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.


 இந்த வீடியோ வெளிவந்து பத்து லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர்.


 இது பற்றி தாரா புன்னகையுடன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்திருக்கின்றோம். 2 மணிக்கு பேருந்து டிப்போவுக்கு  சென்று விடுவோம்.


 பின்பு பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார். பின்னர் எங்களுடைய பணி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என்று கூறுகின்றார்.


 இவர்களது கதை இதனுடன் நின்று விடவில்லை.


 சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதல் 20 ஆண்டுகள் பழமையானது.


 கிரிக்கு 26 வயது இருக்கும் போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பின்னர்  காதல் வயப்பட்டு உள்ளனர்.


 இருவரது காதலுக்கும்  இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லை.


 அவர்கள் பச்சைக்கொடி  காட்டிய பின்பு இருவரும் திருமணம் செய்யலாம் என ஏறக்குறைய முடிவானபோது, இருவரும் ஜாதகம் ஒத்து போகவில்லை.


 இதன் பின்னர் காத்திருந்து,  கொரோனா ஊரடங்கின் போது  இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


 இந்த வீடியோ சமூக  ஊடகங்களில் தற்போது வைரலாகி  வருகிறது.

Read More

Tuesday, July 19, 2022

"திருமண வரன்களை தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து தர வேண்டும்"- வில்லங்கத்தனமாக ஒட்டப்பட்ட போஸ்டர்..!!

July 19, 2022 0

 


 கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு எதிராக இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 இருப்பினும் கூட திருமணம் என்பதே பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியதும் தான்.


 குறிப்பாக வரன் பற்றிய விசாரணையின் போது ஆங் ஆங்கே    நடக்கும் கலவரங்கள்.


 அப்படிப்பட்ட சிக்கலை தான்  கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள்.


 கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை  அடுத்து  பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபம் அடைந்துள்ளனர்.


பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்களின் வரன்களை  தடுக்கும் ஆசாமிகளின் வீட்டில் உள்ள பெண்களை வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்கத்தனமாக போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்குத் தெரு பயணிகள் நிழற்குடை, சுவர்கள் என வரன்களை கெடுக்கும் ஆசாமிகள் பார்த்து அச்சப்படும்படி அளவு ஒட்டி உள்ளனர்.


 அதில் முக்கியமாக "திருமண வரங்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும்.


 "முக்கியமான குறிப்பு: சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படத்தை வைக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


 இந்த வில்லங்கத்தனமான போஸ்டர்  விவகாரம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது பற்றி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு கருங்கல் ஆயினிவிலை பகுதியை சேர்ந்த  சில இளைஞர்கள்  ஒரு படி மேலே போய் அந்தப் பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.







Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA