கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தான் பார்த்து வந்த ஐ.டி வேலையை தூக்கி எறிந்து விட்டு கழுதைப் பண்ணை அமைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாச கவுடா.
42 வயதான இவர் BA பட்டதாரி ஆவார்.
இதற்கு முன்னர் IT துறையில் வேலைப் பார்த்து வந்த இவர், 2020ஆம் ஆண்டு தனது வேலை துறையை துறந்து வேளாண் மற்றும் பண்ணைத் தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் இவர் ஆடு, கோழி, முயல் போன்றவற்றை பண்ணையில் வளர்த்து வந்த நிலையில், இவருக்கு சமீப காலத்தில் தான் கழுதைப் பண்ணை அமைத்துள்ளார்.
இதுகுறித்து சீனிவாச கவுடா கூறுகையில், IT துறையில் பணி செய்துவந்த எனக்கு விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம்.
எனவே நான் எனது வேலையை விடுவித்து, சொந்த ஊரில் வளர்ப்பு பிராணிகள் பண்ணை வைத்து நடத்தி வருகிறேன்.
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் சலவை தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.
இதனால் கழுதைகள் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டு கழுதை பண்ணை அமைக்க முடிவு செய்தேன்.
அதன்படி கடந்த 8-ம் தேதி கர்நாடகத்தின் முதல் கழுதை பண்ணையை தொடங்கி உள்ளேன்.
தற்போது என்னிடம் 20 கழுதைகள் உள்ளன. 30 மில்லி கழுதைப்பால் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
அழகு சாதன பொருட்கள் செய்ய கழுத்தைப்பால் பயன்படுவதால், அதற்கு நல்ல விலை உண்டு. தொடங்கி சிறிது நாட்களிலேயே ரூ.17 லட்சத்துக்கான டெண்டர் கிடைத்துள்ளது என கூறினார்.
No comments:
Post a Comment