Multi Media 24x7: Tamil news

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Showing posts with label Tamil news. Show all posts
Showing posts with label Tamil news. Show all posts

Saturday, October 15, 2022

வாடகை தாய் அம்பலம்மாக்கிய News Tamil

October 15, 2022 0



News Tamil 24x7

சூளைமேட்டில் திருமணமாகாத இளம்பெண்களை சட்டவிரோதமாக வாடகை தாய்களாக்கி ஒரே வீட்டுக்குள் அகதிகள் போல் அடைத்து வைத்திருப்பது குறித்து நியூஸ் தமிழ் பிரத்யேக செய்தி வெளியிட்டதும், அந்த வீடு பூட்டப்பட்டு கர்ப்பிணிகள் அனைவரும் வெளியில் வரமுடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனிடையே, CFC மருத்துவமனை நிர்வாகிகள் நேரடியாக வந்து செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்து.


 செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததோடு, அவசர அவசரமாக வந்த போலீசாரும் ஆதாரத்தை பார்த்துவிட்டு வந்த வழியாகவே காரில் ஏறி திரும்பிச் சென்றனர்.

வாடகை தாய்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தகவலை நியூஸ் தமிழ் செய்தியாளர் ஆதாரத்துடன் காண்பித்தும் கூட போலீசார் கண்டுகொள்ளாமல் சென்றது யாரை காப்பாற்றுவதற்காக என கேள்வி எழுந்துள்ளது.

Read More

Monday, July 25, 2022

பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை வெளுத்து வாங்கிய பெண்..!

July 25, 2022 0

 


 தர்மபுரி பேருந்துநிலையத்தில் தனியாக நின்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர்.


 தர்மபுரி புறநகர் பேருந்துநிலையத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது.


 அதேபோல் பல்வேறு  பணிகளுக்காக தினமும் ஆயிரங்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.


 இதனால் தர்மபுரி பேருந்துநிலையம் எப்போதும் பொதுமக்கள் நிரம்பி  பரபரப்பாக காணப்படும்.


 பேருந்து நிலையத்தின் நடுவே புறக்காவல் நிலையம் உள்ளது.


 இங்குள்ள காவல்துறையினர்  திருட்டு மற்றும் குற்றசம்பவங்களை தடுக்கும் பணியில் உள்ளனர்.


 ஆனாலும் காவல்துறையினர்  கண்காணிப்பு குறைவால் அடிக்கடி பயணிகளிடம்  பிக்பாக்கெட் அடிப்பது, வாகனத்திருட்டு, பெண்களிடம் கேலி கிண்டல் செய்வது, பாலியல் ரீதியாக சீண்டுவது, என அவ்வப்போது  குற்றங்கள்  நடப்பது வழக்கம்.


 இந்நிலையில் நேற்று  புறநகர் பேருந்து நிலையம்  திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும்  இடத்தில் வெளியூர் செல்வதற்கான ஒரு  பெண் தனது  குழந்தைகளுடன் நின்றுள்ளார்.


 அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் குடிபோதையில் அங்கு  நின்றிருந்த பெண்ணை  தவறான முறையில் தொட்டுள்ளார்.


 இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பொதுமக்கள் மத்தியில் இது போன்று   பெண்களிடம் நடந்துகொள்ளுவாயா  என திட்டி  முதியவரை சரமாரியாக  அடித்து கீழே தள்ளி  உதைத்துள்ளார்.


 இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் அப்பெண்ணின்  பிடியிலிருந்து தப்பித்தால் போதும்  என்று ஓடிவிட்டார்.


 பின்பு அந்தப்பெண் அங்கிருந்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு  அவர் செல்லும்  பேருந்து வந்தவுடன் ஏறி சென்றுவிட்டார்.


 மேலும் அப்பெண்ணிண் செயலை அங்குள்ள  பொதுமக்கள் பாராட்டினர்.


 அந்தப்பெண் முதியவரை அடித்ததை  அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் எடுத்து   சமூக வலைதளங்களில் பரப்பியதால் தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.



Read More

Monday, July 4, 2022

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

July 04, 2022 0


 குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அலிகான் கன்னியாகுமரி மேல் மிடாலம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது இதில் அழிக்கால் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்து கரை நோக்கி ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தன இதனால் வீடுகளில் வசிக்கும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வீட்டின் பொருட்கள் தண்ணீரில் மேலும் வேண்டும்

Read More

Monday, June 20, 2022

ஆசிரியை உதவியுடன் தேர்வு எழுதிய 2 கைகள் இல்லாத மாணவி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

June 20, 2022 0

 


இரு கைகளும் இல்லையென பெற்றோரே கைவிட்ட நிலையில் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டார்.


இதில் இரு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதிய ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்த மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.


மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி, ஆசிரியை உதவியுடன் கடந்த மே மாதம் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.


வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மாணவி பதிலளிக்க ஆசிரியர் அதை எழுதினார்.


 பிறக்கும்போதே  2 கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால், பெற்றோர்கள் இவரை பராமரிக்க இயலாமல் கைவிட்டதால், மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இவர் 2 வயது குழந்தையாய் இருந்தபோதிலிருந்து அங்கு வளர்ந்து வருகிறார்.


இந்த நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், மாணவி லட்சுமி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.


அவர் 277 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகள், காப்பாளர்கள் மாணவி லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

Thursday, June 16, 2022

தனக்கு தானே கல்லறை கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்த பெண் கல்லறை அருகிலேயே உயிரிழந்து கிடந்த சோகம்

June 16, 2022 0


 தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து தனக்கு தானே கல்லறை கட்டி கல்லறை அருகிலேயே வாழ்ந்து வந்த பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி(வயது 65).


திருமணமாகாத இவர் பல்லுகுழி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.


100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.


இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர்.


தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.


கடந்த 12-ம் தேதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையில் இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் ரூ. 50 ஆயிரம் செலவில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார்.


கான்கிரீட் மூலம் கட்டப்பட்ட இந்த கல்லறையில் கிரானைட் பதிக்கப்பட்டு, சிலுவை, அவர் முகம் பதித்த தகடு ஆகியவை உள்ளன.


எவருக்கும் பாரமாக இருக்ககூடாது என்பதற்காக எனக்கான கல்லறையை இவர் கட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Read More

Tuesday, June 7, 2022

கணவர் திருடிக் கொண்டு வந்த 22 பவுன் நகை பணத்தை கொண்டு போய் உரியவரிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்ட மனைவி

June 07, 2022 0


 கணவர் திருடிக் கொண்டு வந்த 22 பவுன் நகை பணத்தை கொண்டு போய் உரியவரிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்ட மனைவியின் செயல் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் அருகே கோட்டக்குப்பம் அமிர்தா கார்டன் பகுதியை சேர்ந்த லியாகத் அலி என்பவர் துபாயில் வேலை செய்து வருகின்றார்.

இவருடைய, மனைவி நசீமா (வயது 53) என்பவர் தன்னுடைய தாயுடன் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு நசீமா தனது தாயுடன் வெளியில் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் நகை, ரூ.8000 பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் நசீமா புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், நசீமா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நசீமா வீட்டில் திருடியது, சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் (வயது 38) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை பிடிக்க போலீசார் விரைந்தனர்.

இதனிடையே அர்ச்சுனன் தான் திருடிய நகை மற்றும் பணத்தை தனது மனைவி அன்பரசியிடம் கொடுத்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசி, எப்படி இவ்வளவு நகை, பணம் கிடைத்தது என கணவரிடம் விசாரித்தார்.

அப்போது அவர் நசீமா வீட்டில் திருடியதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து கணவர் கொடுத்த 22 பவுன் நகை, ரூ.8000 பணத்தை நசீமாவின் வீட்டிற்கே சென்று அன்பரசி ஒப்படைத்தார்.

தனது கணவர் மதுபோதையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி கதறி அழுதார்.

அன்பரசியின் நேர்மையை கண்டு நெகிழ்ந்த நசீமா, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.

கணவர் திருடிய நகை, பணத்தை அவரது மனைவி உரியவரிடம் தேடிச் சென்று ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Saturday, June 4, 2022

திருமணத்திற்கு முன்னர் காதலன் இறந்து போனதால், காதலனின் பெற்றோருக்கு மகளாக வாழ்ந்து வரும் இளம்பெண்; நெகிழ்ச்சி சம்பவம்…!!

June 04, 2022 0

 


10 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலன் திருமணத்துக்கு 1 மாதத்துக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் காதலனின் பெற்றோருக்கு மகளாக இருந்து அவர்களது வீட்டில் பணிவிடை செய்து வருகிறார் ஒரு பெண்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பத்மாவதி.

இவர்களுக்கு வெங்கடேசன், சபரி கிருஷ்ணன்(வயது 26), சந்தோஷ் பாபு ஆகிய 3 மகன்கள்.

மூத்த மகன் வெங்கடேசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து அவர் தனியாக வசித்து வருகிறார்.

இரண்டாவது மகன் சபரிகிருஷ்ணன் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.

இவரும், இவரது உறவினருமான மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியுமான 24 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண்ணும் கடந்த10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி சபரி கிருஷ்ணன் – ரேவதிக்கு திருணம் நடைபெற இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ஜூலை மாதம் பணியில் இருந்தபோது சபரி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.

திருமணத்திற்கு சில வாரங்களே இருந்த நிலையில் மணமகன் சபரி கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

தங்களது மகனை இழந்த பெரும் சோகத்தில் இருந்த கோவிந்தராஜ் – பத்மாவதி தம்பதி செய்வதறியாது திகைத்து நிற்க, மணப்பெண் ரேவதி அவர்களது மகளைப்போல அங்கேயே தங்கி பணிவிடைகளை செய்யத் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பத்மாவதி,”சபரி இறந்த அன்று ரேவதி எங்களது வீட்டிற்கு வந்தார்.

அனைத்து சடங்குகளும் முடிவடையும் வரையில் இங்கேயே இருந்த ரேவதியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

ஆனால், சில நாட்களிலேயே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரேவதியை மீண்டும் எங்களது வீட்டிற்கே அழைத்துவந்து விட்டுச் சென்றனர் அவரது பெற்றோர்.

அவரின் மூலமாக என்னுடைய மகனை பார்க்கிறேன்” என கவலையுடன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சபரி கிருஷ்ணன் இறந்தபோது, 3 லட்ச ரூபாய் நிவாரண உதவியாக தருவதாகவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மின்சார வாரியம் அறிவித்திருந்ததாக கூறும் சபரி கிருஷ்ணனின் சகோதரர் வெங்கடேஸ்வரன் இதுவரையில் எவ்வித உதவியும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

10 ஆண்டுகளாக காதலித்துவந்த காதலன் திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டதால், அவரது குடும்பத்தில் ஒருவராகவே இளம்பெண் வாழ்ந்துவருவது பலரையும் சோகம் கலந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA