UPSC தேர்வாணையத்தின் என்ஜினீயரிங் ஆள் சேர்ப்பு அமைப்பு சார்பில் 327 என்ஜினீயரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1-1-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-1-1993-க்கு முன்போ, 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.
முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-10-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://upsconline.nic.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.