வருகின்ற ஜூலை 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும் ஜூலை 6-ம் தேதி நடைபெற இருப்பதால் அதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் - குழித்துறை தேவசம் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு மகா குடமுழுக்கு விழா 06-07-2022 புதன்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment