கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு எதிராக இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இருப்பினும் கூட திருமணம் என்பதே பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியதும் தான்.
குறிப்பாக வரன் பற்றிய விசாரணையின் போது ஆங் ஆங்கே நடக்கும் கலவரங்கள்.
அப்படிப்பட்ட சிக்கலை தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்து பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபம் அடைந்துள்ளனர்.
பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்களின் வரன்களை தடுக்கும் ஆசாமிகளின் வீட்டில் உள்ள பெண்களை வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்கத்தனமாக போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்குத் தெரு பயணிகள் நிழற்குடை, சுவர்கள் என வரன்களை கெடுக்கும் ஆசாமிகள் பார்த்து அச்சப்படும்படி அளவு ஒட்டி உள்ளனர்.
அதில் முக்கியமாக "திருமண வரங்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும்.
"முக்கியமான குறிப்பு: சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படத்தை வைக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வில்லங்கத்தனமான போஸ்டர் விவகாரம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது பற்றி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு கருங்கல் ஆயினிவிலை பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒரு படி மேலே போய் அந்தப் பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment