பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய சிறுவன்: வாளால் 21 கேக்குகளை வெட்டிய வீடியோ வைரல்! - Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Monday, September 19, 2022

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய சிறுவன்: வாளால் 21 கேக்குகளை வெட்டிய வீடியோ வைரல்!

 


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில் 21 கேக்குகளை வாளால் வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை வெவ்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். பலரும் தங்கள் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.


பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்த நிலையில், மும்பையில் உள்ள போரிவலியில் இருந்து இதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூகவலைதம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில், வாளால் 21 கேக்குகளை வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அக்ரம் ஷேக்(17). இந்த சம்பவம் போரிவலி எம்ஹெச்பி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்து, கத்திக்கு பதிலாக ஒரு பெரிய வாளால் 21 கேக்குகளை வெட்டியுள்ளனர்.


அவர் வாளால் 21 கேக்குகளை வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டியதற்காக 17 வயது இளைஞர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் மும்பையின் எம்ஹெச்பி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், அந்த வீடியோ மூலம் அந்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.போலீசார் 17 வயது இளைஞரை கண்காணித்து நோட்டீஸ் வழங்கினர்.


போலீஸ் விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணியளவில், 17 வயது சிறுவன் வாளால் 21 கேக்குகளை வெட்டியதை ஒப்புக்கொண்டான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA