ஆங்கிலம் சரியாக படிக்கவில்லை என கூறி 4 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பலுருதி பகுதியை சேர்ந்த பெற்றோர் எல்.கே.ஜி படிக்கும் தங்கள் 4 வயது மகனை அதேபகுதியில் டியூசன் ஆசிரியராக உள்ள அகில் (வயது 30) என்பரிடம் சேர்ந்துள்ளனர்.
இதனிடையே, 4 வயதான அந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனின் உடலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தளும்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து சிறுவனிடம் கேட்டபோது தான் ஆங்கில எழுத்துக்களை சரியாக படிக்காததால் டியூசன் ஆசிரியர் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, சிறுவனின் தாய் டியூசன் ஆசிரியர் அகிலிடம் கேட்டுள்ளார்.
ஆனால், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் போலீசில் புகார் அளிக்கக்கூடாது எனவும் சிறுவனின் தாயை அகில் மிரட்டியுள்ளார்.
சிறுவனை தாக்கியது, அதை கேட்கச் சென்றபோது மிரட்டல் விடுத்தது குறித்து சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியர் அகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment