ஏசி மூலம் பரவும் புதிய வகை வைரஸ் - 4 பேர் பலி - Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Monday, September 5, 2022

ஏசி மூலம் பரவும் புதிய வகை வைரஸ் - 4 பேர் பலி

 அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் 'லெஜியோனேயர்ஸ்'என்ற நோயால் 4 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


உலகில் தற்போது நோய்களுக்கு பஞ்சமில்லை நாள் தோறும் புதுபுது நோய்கள் உருவாகின்றது. இந்தநிலையில் அர்ஜென்டினாவில் தற்போது ஏசி.யில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதிக காய்ச்சல் , உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மந்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த நோயின் பெயர் 'லெஜியோனேயர்ஸ்.'இது, 'லெஜியோனெல்லா'என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இதே பகுதியில் மேலும் 7 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே நேரம், தொற்று பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்கு அது பரவவில்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கடந்த 1976ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் படை பிரிவு வீரர்களிடையே 'லெஜியோனேயர்ஸ்'நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது.


'லெஜியோனெல்லா' பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும் போதோ அல்லது இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தாலோ நுரையீரல் தொற்று ஏற்படும். அசுத்தமான நீர், அசுத்தமான ஏசி.களில் இருந்து இந்த பாக்டீரியா உருவாகி தாக்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



No comments:

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA