மொபைல் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், செயலியில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுக்க ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளது என்று நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளைத் தடைசெய்தது, அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுக்க 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ் அப் கூறும்போது, "நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம், ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று வாட்ஸ் அப் அறிக்கையில் கூறியுள்ளது.
வாட்ஸ்அப் கட்டமைப்பின்படி பயனரின் கணக்கை மதிப்பிட்டு, செயலியை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று தெரிய வரும் போது, பயனரின் கணக்கை தடை செய்வதாக அறிக்கை கூறியுள்ளது.