கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஓவியர் செல்வம் செடியைக் கொண்டு அப்துல் கலாம் மற்றும் விவேக்கின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் செடியை பயன்படுத்தி இருபெரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக்கின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனாந்தார் தாங்கல் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் மணலூர் பேட்டையை செர்ந்த செல்வம். இவர் செடியை தன் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அதன் இலைகளாலேயே இருவரின் ஓவியங்களையும் வரைந்து அதன் மூலம் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment