உடலோடு சேர்த்து கட்டப்பட்ட பாடப்புத்தகம் – ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Saturday, July 23, 2022

உடலோடு சேர்த்து கட்டப்பட்ட பாடப்புத்தகம் – ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்


 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.


இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், நண்பகலிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.


அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர். பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார். பின்னர், மாணவியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


"என் மகளை நான் புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறேன்" - கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கம்


என் மகளை நான் புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறேன் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கமாக கூறி உள்ளார்.


மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது.


இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் இன்று காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதன்காரணமாக காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது. பாடப் புத்தகத்தோடு மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


மாணவி ஸ்ரீமதியின் உடலோடு பாட புத்தகம் சேர்த்து கட்டப்பட்டது. அவர் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய எண்ணியிருந்தார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற உயிரியல் புத்தகம் மாணவியின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. இது காண்போரின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது.


முதல் முறையாக பெரியநெசலூர் மயானத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்துள்ளனர். மயானத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் அமைச்சர் கணேசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.


கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன். அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள்; இனியும் இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது.


என் மகள் மரணத்தில் பள்ளி தாளாளர், அவரது மனைவி, மகன்கள், பள்ளி ஆசிரியைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் குற்றவாளிகள்; அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.


தமிழக அரசு தற்போது வேகமாக வழக்கை விசாரித்து வருகிறது. நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என கூறினார்.













No comments:

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA