News Tamil 24x7
சூளைமேட்டில் திருமணமாகாத இளம்பெண்களை சட்டவிரோதமாக வாடகை தாய்களாக்கி ஒரே வீட்டுக்குள் அகதிகள் போல் அடைத்து வைத்திருப்பது குறித்து நியூஸ் தமிழ் பிரத்யேக செய்தி வெளியிட்டதும், அந்த வீடு பூட்டப்பட்டு கர்ப்பிணிகள் அனைவரும் வெளியில் வரமுடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனிடையே, CFC மருத்துவமனை நிர்வாகிகள் நேரடியாக வந்து செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்து.
செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததோடு, அவசர அவசரமாக வந்த போலீசாரும் ஆதாரத்தை பார்த்துவிட்டு வந்த வழியாகவே காரில் ஏறி திரும்பிச் சென்றனர்.
வாடகை தாய்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தகவலை நியூஸ் தமிழ் செய்தியாளர் ஆதாரத்துடன் காண்பித்தும் கூட போலீசார் கண்டுகொள்ளாமல் சென்றது யாரை காப்பாற்றுவதற்காக என கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment