உயிர் கொடுத்த தோழனுக்கு நண்பனாக மாறிய கொக்கு
உத்தரப் பிரதேசம் அமைதி மாவட்டம் மண்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முகமது ஆரிப் ஆண்டு தனது பயிலுக்கு சென்ற போது சாரஸ் எனப்படும் பெரியவகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார் உடனடியாக அதனை தனது வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டு போட்டு உணவளித்தார்.
கால் காயம் சரியான பிறகு ஆரிபை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனே பயணிக்க ஆரம்பித்தது.
ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது வாக்கிங் சென்றால் அவருடனையே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பைரலான நிலையில் சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வாரத்துறையின் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் சேர்த்தனர்
அன்பும், நட்பும் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் தன்னை காயத்திலிருந்து மீட்ட இளைஞரை சரணாலயத்தில் பார்த்ததும் சாரஸ் கொக்கு, ஆனந்தத்தில் துள்ளிக்குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி
முகமது ஆரிப். கடந்தாண்டு தனது வயலுக்குச் சென்ற போது சாரஸ் எனப்படும் பெரிய வகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார். உடனடியாக, அதனை தனது
வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டுப்போட்டு உணவளித்தார்.
கால் காயம் சரியான பிறகு ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனேயே பயணிக்க ஆரம்பித்தது. ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது, வாக்கிங் சென்றால் அவருடனேயே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணலாயத்தில் சேர்த்தனர்.
நண்பனை பிரிந்த சோகத்தில் இருந்த கொக்கு சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததால், கொக்கின் நட்பும் பிரிவும் உத்தரப்பிரதேசத்தில் அரசியல் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில், சரணலாயத்திற்குச் சென்ற ஆரிப்பை பார்த்த்தும் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த கொக்கு ஆனந்த நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த வீடியோவை பாஜக எம்.பி வருண்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொக்கை ஆரிப்புடன் சேர்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.
யானைக்குட்டிக்கும் மனிதர்களுக்குமான நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படமான தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆஸ்கர் விருதை பெற்று உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், மனிதனுடனான கொக்கின் நட்பும் கவனத்தை ஈர்த்து, அன்பு செலுத்துவதற்கு அன்பைத் தவிர வேறெந்த காரணமும் தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
No comments:
Post a Comment